உனதோரம் நடக்கையிலே விழியோரம் பார்த்ததென்ன
விழியோரம் பார்க்கையிலே இதழோரம் சிரித்ததென்ன
இதழோரம் சிரிக்கையிலே காதோரம் சிலிர்த்ததென்ன
காதோரம் சிலிர்க்கையிலே தலையுச்சி குளிர்ந்ததென்ன
தலியுச்சி குளிர்களியிலே உடல் முழுதம் மகிழ்ந்ததென்ன
உடல் முழுதும் மகிழ்கையிலே மனம் மட்டும் தகித்த்ததென்ன
மனம் மட்டும் தகிக்கையிலே சுவாசம் கூட சுட்டதென்ன
சுவாசம் சுட்ட அனல் காற்று நெஞ்சு கூட்டை அடைத்ததேன்னே
நெஞ்சுகூடில் அடைந்த நினைவு கட்டவிழ துடிப்பதென்ன
கட்டவிழ துடித்த நினைவு உன்னால் கட்டுப்பட்டு கிடப்பதென்ன
கட்டுப்பட்டு கிடந்த நினைவு கண்ணீராய் மாறியதென்ன
கண்ணீராய் மாறிய நினைவு உன் கவனம் கலைத்ததென்ன
உன் கவனம் கலைந்த பின்பு என் மனமும் குவிந்ததென்ன
என் மனம் குவிந்த பிறகு பேசத்தான் விழைந்ததென்ன
பேசத்தான் விழைந்த எனக்கு நீ காத்து கிடந்ததென்ன
காத்துதான் கிடக்க நீயும் என் வார்த்தை அடைதததென்ன
என் வார்த்தை அடைக்கியிலே கண் பேச துடித்ததென்ன
கண் பேச துடிக்கையிலே தொண்டைக்குழி அடைதததென்ன
தொண்டை குழி அடைக்கியிலே உன் நினைவில் தவித்ததென்ன
உன் நினைவு என் நினைவும் ஒன்றா என்று வியந்ததென்ன
ஒன்றென்று நினைக்கையிலே ஒன்றிரண்டாய் பிரிந்ததென்ன
ஒன்றிரண்டாய் பிரிந்த பின்பும் பின்போன்றாய் இணைந்ததென்ன
பின்போன்றாய் இணைந்த பின்பும் பல தடைகள் வந்ததென்ன
பல தடைகள் வந்த போதும் மனம் ஒத்து நொந்ததென்ன
மனம் இரண்டும் நொந்த போதும் பிரிவில்லை எனப் புரிந்ததென்ன
பிரிவில்லை என புரிந்த பின்பும் செர்தலில்லை என உணர்ந்ததென்ன
சேர்தலில்லை என உணர்ந்த பின்னும் சேர்ந்திருக்க விழைவதென்ன
விழைதலெல்லாம் அடைந்து விட்டால் ஆசை மேல் பற்றென்ன
ஆசை என்பது பற்றென்றால் உன் மேல் என் பற்றின் பெயரென்ன
பற்றின் பேர் காதலென்றால் அன்பென்ற சொல்லின் அர்த்தமென்ன
அன்பென்ற சொல்லின் அர்த்தம் கேட்டால்
உன் பேர் சொல்லி நான் மாண்டதென்ன????