நிலவின் வடிவம் அழகென்பீர், அவள் முகத்தை நீர் என்னென்பீர்
கடலின் கயல்கள் அழகென்பீர், அவள் கண்களிரண்டை என்னென்பீர்
ராமன் வில்லை பெரிதேன்பீர் அவள் புருவ வளைவை என்னென்பீர்
ஒற்றை விண்மீன் அழகென்பீர், அவள் நெற்றிப் பொட்டை என்னென்பீர்
வாளின் கூர்மை அதன் நுனியில் என்பீர், அவள் நாசி கூர்மையை என்னென்பீர்
பூவின் பனித்துளி சிலிர்ப்பென்பீர், அவள் மேலுதட்டின் வியர்வையை என்னென்பீர்
சிப்பிக்குள் முத்தை அறிதென்பீர், அவள் செவ்வாயின் பற்களை என்னென்பீர்
வலம்புரி சங்கினை அழகென்பீர், அதை மிரட்டும் கழுத்தினை என்னென்பீர்
சிலையின் ஸ்தனங்கள் கலை என்பீர், கண்கள் நிலை குத்திப் போவதை என்னென்பீர்
மழலைச் சிரிப்பை அழகென்பீர், அவள் பார்வையின் ஹாஸ்யம் என்னென்பீர்
மரகத யாழிசை அமுதென்பீர், அவள் (புன்) முறுவல் ஓசையை என்னென்பீர்
பொன்னில் செய்ததை நகை என்பீர், அவள் புன்னகை மதிப்பு என்னென்பீர்
மலைசரிவு அபாயமேன்பீர், அவள் இடைச்சரிவு என்னென்பீர்
மழைப் பொழிவு பாக்கியம் என்பீர் , அவள் அன்பின் பெருக்கை என்னென்பீர்
வெற்பின் உச்சியை சிகரம் என்பீர், அவள் தலை உச்சி வகிட்டினை என்னென்பீர்
தீயின் தாக்கம் அனல் என்பீர், அவள் மூச்சின் தாக்கம் என்னென்பீர்
காற்றின் வேகம் புயல் என்பீர், அவள் கோபத்தின் வேகம் என்னென்பீர்
அன்பு காட்டினால் தாய் என்பீர், அவள் அணைத்துக் கொண்டால் என்னென்பீர்
ஆண் பெண் காதல் அழுக் கென்பீர், அவள் மணந்தவளானால் என்னென்பீர்
காதல் செய்தல் இனிதென்பீர், காதல் கொய்தல் என்னென்பீர்
இது முடியா உறவு மறவென்றீர், மறந்து நாள் மரித்ததை என்னென்பீர்?
என்னென்பீர் என்னென்பீர்????