Thursday, August 11, 2011

பச்சை தாவணி



வெற்றிடம் எங்கிலும் அவன் முகம் பார்த்த நான்
மனம் பார்க்க தவறியதால்
அவளுடன்
அவன்

வேப்ப மர நிழல்
காகத்தின் எச்சம்
கன்னத்தின் ஈரம்
காதலின் மிச்சம்

சீதை அணைத்து ராமன் முதுகு
தடவியது ராமாயணம்
அவள் பார்வையிலேயே....
எனக்கு முதுகு தொட
ஆளில்லை...


மொட்டை மாடியில்
அவள் பச்சை தாவணி
தொடத்தான் ஆசை
அவள்
அணிந்திருக்கும்
போது.

இழந்து விட்ட இளமையை
நினைவூட்டுகிறது
அவள் பிள்ளையின்
ஆறாம் வகுப்பு புத்தகம்.
முகம் அலம்புகையில்
புறங்கையில்
அவன் வாசனை

இதழ்களுக்கிடையில் போர்
விழுந்தன உடல்கள்
வென்றது தாம்பத்யம்
நினைவுச் சின்னம் அடுத்தாண்டு


தாகம் தவிர்க்க
உதவுமா உன் மேல் உதட்டின்
வியர்வை
துளி

ஒரு சின்ன மயிர் கலைப்பால்
என் உயிர் குலைந்ததென்
மாயமென்ன

கலக்கம் என்றால் என்னவென்று
உணர்ந்தேன் அவன்
பார்க்கலாமா என்ற போது

அழகு என்பதன் முழு அர்த்தம்
அவன் என் பெயரை அழைக்கும்
தொனியில்

மனம் புரிந்த பின்னர் தான் உணர்ந்தேன்
மனம் உணர்தல் வேறு மனம்
புணர்தல் வேறென்று


தெருவை கடைக்கையில் வந்த
சிகரெட் புகை நினைவூட்டியது
என்னவனின் காதல் தோல்வியை


அவன் என்னை வர்ணிப்பதில்லையே
என்ற ஏக்கம் என்னிடம் தொலைந்தது
அவன் கண் சிலிர்ப்பை பார்த்து

நான் அவளை காதலித்தது
எனக்கு தேவைப்பட்ட போதல்ல
அவளுக்கு வேண்டிய பொழுது.


1 comment: