பிரிவும் காதலும்
தலைப்பை பார்
பிரிவும் காதலும்
இரண்டும் ஒன்றா வெவ்வேறா
ஒன்றிருந்தால் ஒன்றிருக்கும்
பிரிதலில் காதலின் வலி இருக்கும்
காதலில் பிரிதலின் பயம் இருக்கும்
காதலும் பிரிதலும் ஒன்றேன்றானபின்
காதலும் பிரிதலும் ஒன்றுதான்
பார்க்காமல் போகிறாயே கல் நெஞ்சக்காரா
என்றாள்
பார்க்கையில் நெஞ்சு பனிக்கட்டியானது
எனக்கல்லவா தெரியும்
இருள் கவ்வுகையில் அவள் தன இதழ்களைப் பொத்தினாள்
நான் கை பிடித்து பத்திரம் என்றதும்
அவள் கண்ணில் படர்ந்தது
என்ன உணர்வு?
அவளின் பார்வையில்
நான் கூட அழகானேன்
ஆனால் நான் அழக் காரணம்
அவளானாள்
அப்போதும் அவள் அழகே தான்.
கண்கள் பேசும் கைகள் பார்க்கும்
நெஞ்சம் ஏங்கும
ஆனால் வலி மட்டும்
இருவருக்கும். இது காதலான நாடகமா
இல்லை பிரிவிற்கான ஒத்திகையா
அவளை பார்த்த பின் என் சட்டை மட்டும் நிறம் மாறவில்லை
என் மனம் முழுதும் மாறி விட்டது
என்னை பார்த்த நாள் நினைவில்லை என்றாள்
ஆனால் என்னை காதலிக்க ஆரம்பித்தது அன்று தான் என்றாள்
கனவுகள் என்னை விட்டு விலக ஆரம்பித்து விட்டது அன்பா
ஏனெனில் உன்னால் நான் உறங்குவதே இல்லையே
என்ற என்னவளின் வார்த்தை கேட்ட நாள்
எனது கனவுகளும் என்னுடன் சண்டையிட்டு
பிரிந்து விட்டன.
கடைசீயில் சேர்ந்தது கனவுகள் மட்டுமே...
பார்த்த நாள் மறவேன்
பழகிய நாள் மறவேன்
பசித்த நாள் மறவேன்
அவளை ரசித்த நாள் மறவேன்
நினைத்த நாள் மறவேன்
ஆனால் மறக்க நினைக்கிறேன்
நாங்கள்
பிரிந்த நாளை
என்னை வர்ணிக்க முடியுமா
என என்னை அவள் கேட்ட பொழுது
ஏன் முடியாது
என ஒற்றை வார்த்தையில்
சொன்னேன்
அவள் பெயரை...
அடப் பாவி என்னை பெண்ணாய் பார்க்க சொன்னால்
நானாகப் பார்த்து விட்டாயே
என்ற அவள் சிரிப்பில் தெரிந்தது அவளின்
ரசனை
எல்லாப் பெண்களும் நீயாக முடியாது
ஏனெனில் நான் உன்னை மட்டுமே பெண்ணாகப்
பார்த்து விட்டேன்.
நினைவெங்கும் நீயே இருப்பதால்
நான் நீயாக மாறி ஆகிப் போனது
பல காலம்.
இவ்வளவு காதல் எனக்குரித்தா என்றால்
அது போல் நான் இல்லை என்றாள்
காதலை மட்டுமே தரும் உனக்கு
அதை மட்டுமே நான் திருப்பி தருவேன்
என ஏனடா நம்பினாய்.
உன்னை பிரிந்தால்
என் வலி உன் அளவில்லை
என்றாள்
பைத்தியக் காரி அந்த நொடியில்
என் வலி உணர வில்லையடி நீ
என எப்படி நான் சொல்ல.
பிரிவும் காதலும்
வெவ்வேறல்ல
அவை இரண்டின்
அருஞ்சொற்பொருள்கள் ஒன்று தான்
காதல் எனில் பிரிவு
பிரிவென்றால் காதல்.
பிரிவின் காரணம்
பல நீ சொன்னாலும்
எனக்கதில் ஒப்புதல் இல்லை.
நானறிந்த ஒரே காரணம்
காதல்.
2 comments:
pirintha kadhal inaikirathu ninaivukalil
Thanks
Post a Comment