Sunday, February 7, 2010

திருப்தி அல்லது நிம்மதி எது வேண்டும்?

திருப்தி அல்லது நிம்மதி எது வேண்டும்?

இது என்ன கேள்வி இடது கை வேண்டுமா வலது கை வேண்டுமா என்பது போல என்று நினைக்கிறீர்களா? அல்லது உடல் வேண்டுமா அல்லது உயிர் வேண்டுமா என்று கேட்டால் என்ன பதில் சொல்வது என நினைக்கிறீர்களா? ஆம் எனில் வாருங்கள் என்னுடன் கை கோர்த்து ஒரு சிறிய உலா போய் வருவோம்.
நமக்கு திருப்தி தருவது என்ன? கல்வி, செல்வம், குடும்பம், பணி, நண்பர்கள், உறவினர்கள் இன்னும் பல. ஆனால் இவையனைத்தும் நமக்கு உண்மையான திருப்தியைத் தருகிறது என்று சொல்பவர்கள் எத்தனை பேர் கை உயர்த்துங்கள். சரி. இவை அனைத்தும் திருப்தியை மட்டும் அல்ல நிம்மதியையும் சேர்த்து தருகின்றன என்று சொல்பவர்கள் எத்தனை பேர் கை உயர்த்துங்கள். அடடா! என்ன பாதி கைகள் இறங்கி விட்டன. ஒரு மனிதன் நிம்மதியாய் வாழ இதை விட வேறேதும் தேவையா என்ன? இவை திருப்திகரமாக அமைந்து விட்டால் நிம்மதி தானாக வந்து விடுமல்லவா? இல்லையா? பிறகு நமக்கு வேறு என்ன தான் ஐயா வேண்டும்?
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் no peace of mind பாட்டு ஞாபகம் வருகிறதா? திருப்தியையும் நிம்மதியையும் தேடி அலைபவர்கள் தானே நாம் அனைவரும். இருப்பது இது இரண்டு மட்டுமே. ஆனால் இதிலும் நமக்கு ஒன்றை ஒன்று பெரிதாகத் தெரிகிறது. இது எதனால்? என்ன வித்தியாசம் இதில் நாம் காண.
உண்மையில் எது மிகத் தேவை, முக்கியம்? பகுத்து அறியும் வழி தான் என்ன? அல்லது இரண்டும் ஒன்று தானா? நாம் தான் அதை தேவையின்றி வேறுபடுத்திப் பார்த்த்துக் குழப்பம் அடைந்து கொண்டு இருக்கிறோமா? சற்றே அலசிப் பார்ப்போம்.
இந்த ஒரு அலசலில் இதற்கு விடை தெரிந்து விடும் என்று நான் சொல்ல வரவில்லை. எனக்கு ஏற்பட்ட குழ்ப்பங்கள், கேள்விகள் உங்களில் பலருக்கு எழுந்திருக்க கூடும். அல்லது இதைப் படிப்பதன் மூலம் புதிதாகக் குழ்ப்பங்கள் வரலாம். அது கூட உஙகள் சுய முன்னேற்றத்திற்கான ஒரு படியாகக் கூட இருக்கலாம். எழுதுவதில் உள்ள ஒரு வசதி என்னவென்றால் படிப்பவர்கள் கண்டிப்பாக இதைப் படித்திருப்பார்கள் என ஒன்று. அல்லது யாரோ ஒருவர் தானே படிக்கப் போகிறார் நாம் எழுதுவதை எழுதி வைப்போம் என எழுதலாம். இந்த பகிர்தலைப் பொறுத்த வரை அது உஙகள் விருப்பம்.
முதலில் கல்வியை எடுத்துக் கொள்வோம். படித்த அனைவரும் நிம்மதியாக, திருப்தியாக இருக்கிறார்கள் என சொல்லமுடியுமா?. உலகில் இப்போது மனிதர்களின் அளவுக்கு படிப்புகளும் கல்விக்கூடங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு மாணவனும் தனது திறமையை உணர விடாமல் அவனது பெற்றோர்களும், சுற்றங்களும், நண்பர்களும், சூழ் நிலைகளும் அவனை தவறான பாதைக்கு திருப்புகின்றன. பிடிக்காத படிப்பை எடுத்து படித்து வாழ்வில் தோற்றுப் போன மனிதர்கள் ஏராளம்.
பிடித்தை படிப்பை படிக்க முடியாமல் கிடைத்ததை படித்து வாழ்வில் தோற்றுப் போன மனிதர்கள் ஏராளம். இந்த இருவருக்கும் நிம்மதியோ திருப்தியோ கிடைப்பதில்ல. இவை இரண்டும் நடந்து படித்து முடித்து வரும் மாணவர்கள் அனைவரும் திருப்தியாக நிம்மதியாக இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. ஏன்?
கல்வி அவர்களுக்கு புத்தகப் படிப்பை மட்டும் சொல்லிக் கொடுக்கிறது. இந்த உலகம் அவர்களுக்கு வாழ்க்கைப் படிப்பை சொல்லிக் கொடுக்கிறது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் மிக அதிகம்.
படிக்கவும் படித்து பிறகு நல்ல பணியிலும் சேர்ந்து விட்டவர்கள் எப்படி உளர்? அவர்கள் நிலை இன்னும் கவலைக்கிடம். தொழிற் போட்டி, இடமாற்றம், சம்பளம், ஊர், மக்கள் என எவ்வளவு விஷயங்களில் தான் அவர்கள் மாற்றங்கள் செய்து கொள்ளமுடியும். இவை அனைத்தும் அவர்கள் மன ஆழத்திற்கு சென்று பின்னர் மன அழுத்தமாக மாறி அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்க ஆரம்பிக்கிறது.
அடுத்ததாக மிக முக்கியமாக குடும்ப வாழ்க்கை. கணவன் மனைவி என இரண்டு பேரும் சம்பாதிக்கின்ற குடும்பங்கள் இப்பொழுது பெருத்து வருகின்றன. லட்ச லட்சமாக இருவரும் சம்பாதித்தாலும் இவர்கள் வீட்டில் இருக்கப் போவது அவர்கள் சம்பாதித்த பொருட்களும், பணியாட்களும் தான். குழந்தை பெறுவதை தள்ளிப் போட்டு பின்னர் கரு உருவாக மருததுவர்களை தேடி ஓடுகிறார்கள். பெற்ற குழந்தைகளை பணியாட்களிடம் விட்டு விட்டு அலுவலகம் ஓடுகிறார்கள். பணம், வசதி இரண்டும் மட்டும் இருந்தால் குழந்தைக்குப் போதுமா? அன்பறியாத குழந்தை தவறாக வளர்வதில் வியப்பு ஏதும் இல்லை. இதில் சில விதி விலக்குகள் உண்டு. ஆனால் அவை மிகக் குறைந்த சதவீதம் தான். இவர்கள் எதில் திருப்தி தேடுகிறார்கள், பணத்திலா, பதவியிலா, வசதியிலா. இவர்கள் நிம்மதி எதில் இருக்கிறது மேற் கூறிய எதிலும் இருக்க வாய்ப்பு இல்லை. இவை எதுவும் நிலையற்றவை மாறக் கூடியவை. பின் எதற்காக இவர்கள் பணி புரிகிறார்கள், சம்பாதிக்கிறார்கள்?
உறவினர்கள் மிக இன்றியமையாத ஒரு அம்சமாக இந்திய கூட்டுக் குடும்ப வாழ்க்கைத் தத்துவத்தில் விளங்குகின்றனர். ஆனால் நம்மில் எத்தனை குழந்தைகளுக்கு, மாமா, மாமி, அத்தை, நாத்தனார், கொழுந்தியார், நங்கையார், ஷட்டகர், மசசினர், மச்சினி, போன்ற உறவுளும் அவர்கள் வாரிசுகளும் மிகவும் நெருக்கமாகத் தெரியும். உங்களுக்குத் தெரியும் என்றால் உங்கள் வயது நிச்சயம் 50 வயது இருக்கக் கூடும். உங்களுக்குத் தெரியும் பட்சத்தில் இந்தக் கேள்வி உங்கள் உறவினர்களின் வாரிசுகளுக்குப் பொருந்தும்.
கல்வி, செல்வம், குடும்பம், பணி, நண்பர்கள், உறவினர்கள் இன்னும் பல. ஆனால் இவையனைத்தும் நமக்கு உண்மையான திருப்தியையும் நிம்மதியையும் தருகிறது என்று சொல்பவர்கள் கைகள் இறங்கி விட்டன. ஒரு மனிதன் நிம்மதியாய் வாழ இதை விட வேறேதும் தேவையா என்ன? இவை திருப்திகரமாக அமைந்து விட்டால் நிம்மதி தானாக வந்து விடுமல்லவா? இல்லையா? இல்லை என்பது இப்பொழுது லேசாகத் தெரிகிறது. பிறகு நமக்கு வேறு என்ன தான் ஐயா வேண்டும்? மேலும் அலசுவோம். இதற்குத் மிகத் தெளிவான விடை நம்மிடம் இருக்கிறதா, இல்லையா என்பது குறித்து ஒரு சின்ன பயிற்சி. உங்கள் பார்வையில் திருப்தி என்பது என்ன. நிம்மதி என்பது என்ன. சொல்லுங்கள். அதை வைத்து ஒரு முடிவிற்கு வர முடிகிறதா என பார்ப்போம்.
பதிலளிக்கும் முன் நன்றாகச் சிந்தியுங்கள். மேம்போக்கான சிந்தனைகள் தெளிவின்மையைத் தான் தரும். அதுவரை காத்திருக்கிறேன்.
அன்புடன்
உங்கள் மதுசூதனன்.

1 comment:

chandar said...

Satisfaction and peace of mind. what an option to choose. Can't we have the cake and eat too. If you have satisfaction, you have peace of mind. If you have peace of mind, you will have sarisfation.
My answer,or philosophy or explanation is if we search outside both of them are not available or visible. If you search inside, which is easier too (Is it Easier...) it will be worth and enduring one.
Our problem is were are always chasing one after the other, as if we attain this, that will happen, if we attain that, this will happen.
Mine may sound philosophical. Worlds greatest riddle emanate and solved only by philospophies my dear friend. It is only our maturity level which determines the way look at things.
Kandavar Vindilar. Vindavar Kandilar.