Wednesday, August 17, 2011

மழை சுகம்

கவிதை எழுத காரணம்
கேட்டால்
கட்டளை இட்டால்
வரும்
உன் நினைவு
இல்லாவிடினும் வரும்.

மழை சுகம்
அவளோடு இருந்தால்
மழை சுகம்
என்னோடு நடந்தால்
மழை சுகம்
கையே குடையானால்
மழை சுகம்
மனம் குளிர உடல் நனைத்தால்
மழை சுகம்
நானே மழையானால்

ஒரு படம் சாதி
வெறி ஏற்றுமென்றால்
சான்றிதழ் வாங்க
ரூபாய் நூறு.

முகம் தொட்ட விரல்களை
நெட்டி முறிக்கையில்
எண்ணினேன்
மோதிரங்கள்
நான்கு.


பணியென்றும், மழையென்றும்
வெயிலென்றும், இரவென்றும்
பகலென்றும்
சுற்றியதால் கிடைத்தது
வேலையல்ல. வாழ்க்கை
நீ.

No comments: