Thursday, December 10, 2009

புத்தகங்கள்



புத்தகங்கள் நம் வாழ்வில் ஒரு சிறந்த மாற்றத்தினை ஏற்படுத்துகின்றன என்பதில் எனக்கு எந்த ஒரு ஐயமும் இல்லை. புத்தகம் இல்லாத ஒரு வாழ்வினை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. புத்தகங்களுடனான எனது அறிமுகம் எனது 5 வது வயதில் எனது அபபாவினால் எனக்கு ஏற்படுத்தப் பட்டது. முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் போன்றவற்றுடன் கல்கண்டு, முத்தாரம், குமுதம், விகடன் என பல விதமான இதழ்களுடன், தமிழ்வாணன், புஷ்பா தங்கதுரை, ராஜேந்திரகுமார், ராஜேக்ஷ்குமார், சுஜாதா என எனக்கு அறிமுகமான எழுத்தாளர்கள் தான் எத்தனை பேர். ரிப் கெர்பி, மாண்ட்ரேக், இரும்புக்கை மாயாவி என பல விதமான நாயகர்கள் தான் எனது ஆதர்சம்.

ஒவ்வொரு வாரமும் வெள்ளியன்று என் அப்பாவின் அலுவலகம் சென்று அவருடன் திரும்பி வரும் போது அந்த வாரத்திய இதழ்களுடன் வருவது என் வழக்கம். விகடனும், குமுதமும் அப்பாவுடன் போய்விட புதினங்களுடன் எனது உறவு ஆரம்பிக்கும். ரத்னபாலா, அம்புலிமாமா போன்றவற்றில் இருந்து என்னை மாற்றியவரும் எனது அப்பா தான். சம்பாதித்ததில் ஒரு கணிசமான அளவு புத்தகத்திற்கு என செலவழிக்கலாம் என எனக்கு கற்றுக் கொடுத்தவரும் அவர் தான். எனக்கு என் உறவினர்கள் வரும் பொழுது கொடுக்கும் பணத்தினை தின்று தீர்க்காமல் புத்தகத்தை வாங்கும் விதத்தை கற்றுக் கொடுத்த அவர் அந்தக் காலத்தில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பாக 7 ரூபாய்க்கு நான் தமிழ்வாணனின் கருகிய கடிதம் வாங்கி வந்த பொழுது தட்டிக் கொடுத்து பாராட்டினார்.

விளையாட்டுப் பருவத்தில் கூட என் படிக்கும் ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொண்டேன் என்றால் அதற்கு என் வீட்டில் நிரம்பி வழிந்த புத்தகங்களும் ஒரு காரணம். காமிக்ஸ் காலம் முடிந்து வயது சிறிது ஏறியதும், சுபா, பட்டுக் கோட்டை பிரபாகர், பால குமாரன், சுஜாதா, என எனது ஆர்வம் விரிவடைந்து கொண்டே இருந்தது. சங்கர்லால், தமிழ்வாணன், சாம்பு, வைஜயந்தி, நரேந்திரன், பரத், சுசிலா, விவேக், ரூபலா, கோகுல்னாத், கணேஷ், வசந்த், என அனைவரும் என் மனக்கண் முன் தங்கள் சாகசங்களை காட்டி என்னை சிலிர்ப்பூட்டினார்கள். சுஜாதாவின் வார்த்தை ஜாலங்களுக்கும், மெக்சிகோ சலவைக்காரி ஜோக்குக்கும் நான் அடிமை என்றால் அது மிகையல்ல. கொலையுதிர் காலம், கரையெல்லாம் செண்பகப்பூ, கிழக்கே ஒரு குற்றம், நிர்வாண நகரம்,நைலான் கயிறு இவையெல்லாம் எத்தனை முறை படித்தேன் என்ற கணக்கே இல்லை.

புதினங்களில் இருந்து சற்றே விடுபட்டு பாலகுமாரன், சிவசங்கரி, சாண்டில்யன், பாக்கியம் ராமசாமி, என என் வட்டம் விரிவடையத் தொடங்கியது. பாலகுமாரனின் நிலாவே வா வும், சிவசங்கரியின் நண்டும், சாண்டில்யனின் யவன ராணி, விஜய மகாதேவி யும் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் கொஞ்சமல்ல. ஆங்கில நாவல்களுடன் என் அறிமுகம் மிகக் குறைவு. தமிழ் மீடியத்தில் படித்த எனக்கு ஆங்கிலம் ஒரு பாடமாகவே தோன்றியதே தவிர ஒரு நாவல் படிக்கும் அளவிற்கு எனக்கும் ஆங்கிலத்திற்கும் அவ்வளவு பரிச்சயமில்லை. சாதாரண சேஸ், நாவல் கூட எனக்கு மிகக் கடினமாக தோன்றியதில் வியப்பில்லை.

நான் ஆங்கில நாவல் படிக்கதொடங்கியது 1999 இல் தான் என்றால் பலர் நம்பத் தயாராக இருக்க மாட்டீர்கள். எனது அலுவலக நண்பர் ஒருவர் (ராஜேந்திரன்) மூலம் நான் படித்த முதல் ஆங்கில நூல் ஜொனாதன் ப்ளாக் எழுதிய oil எனும் நாவல். அந்த நாவலுக்கு பிறகு house on hill, carnage merchants, என அவரது அத்தனை நாவல்களும் எனக்கு அத்துபடியாகின. அதன் பின் நான் தொட்ட ஆங்கில எழுத்தாளர்கள் ஜெப்ரி ஆர்ச்சர், மற்றும் சிட்னி ஷெல்டன், இர்விங் வாலஸ், ஃப்ரெட்ரிக் போர்சித், ஜாக் ஹிக்கின்ஸ் போன்ற க்ரைம் எழுத்தாளர்கள்.

if you wanted to learn the filthy words in english, and exhaustive
sex reading prefer jonathan black and irving wallace. If you wanted to learn the
english etiquette, conversational practice, communication development read
jeffrey archer, ken follet, arthur hailey. If you prefer a unputdownable novel
go to sheldon. Each author got his own merits and demerits and a distinct style
too. Robin cook for medicine thriller, Jonathan black for international
conspiracy, Sheldon for woman empowerment and deceit, Archer for unimaginable
twists and turns, Forsyth and higgins for espionage, Herald robbins and wallace
for titillation, john grisham for law and the list goes on. some of the best
selling and readable novels of the above authors are listed below ( a must read
)

jeffrey archer - 11th commandment, kane and abel, prodigal daughter, shall we tell the president, honour among theives, first among equals, fifth estate
sheldon - if tomorrow comes, other side of midnight, blood line, morning noon and night, tell me your dreams
black - oil, carnage merchants, house on the hill
hailey - overload, wheels, hospital, hotel, in high places
grisham - pelican brief, last juror, partner,
irving wallace - the fan club, celestial bed, almighty, miracle, The Man, The prize, The Plot

கிரைம் நாவல்களில் இருந்து வெளிவரத் துடித்துக் கொண்டிருந்த் எனக்கு தற்செயலாக கிடைத்த அறிமுகம் தான் ராபின் ஷர்மா மற்றும் பாலோ கோயல்ஹொ. எனது வாழ்வின் அடுத்த நிலையை எனக்கு தெரிவித்த பெருமை இவர்கள் எழுதிய mega living and The alchemist ஆகிய இரண்டு புத்தகங்களையே சாரும். இந்த புத்தகங்களை படித்த பிறகு எனக்கு நான் படிக்கும் புத்தகங்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற தீர்மானம் ஏற்பட்டு விட்டது. நாவல்களில் இருந்து இலக்கியம் மற்றும் சுய முன்னேற்ற நூல்களின் பால் எனது கவனம் திரும்பத் தொடங்கியது.

எவ்வளவு படித்தாலும் என்னுரையாகாதே. சொன்னது கேட்டாயே சும்மா இருந்து விடு என்ற சித்தர் பாடல்கள் புத்தகம் எனக்கு கிடைத்தது. அடுத்த மாற்றம் துவங்கியது.. சித்தர் பாடல்களின் தாக்கம் என்னை இலக்கியத்தில் இருந்து பிரித்து ஆன்மீகத் தேடலுக்கு வித்திட்டது. அப்பொழுது எனக்கு இடறியது தான் swami rama's living with himalayan masters, walking with a himalayan master, auto biography of a yogi by paramahansa nityananda, divine and bless by swami sivananda.

யோகிகளுக்கு மேல் யோகிகள் நிலையைப் படித்த எனக்கு தேடல் கூட ஆரம்பித்த போது வந்து இறங்கியவர் தான் நிஸர்கடட்ட மஹாராஜ். இவரின் i am that படித்த பொழுது என்னுள் ஏற்பட்ட உணர்வுகள் உரையிட முடியாததவை. ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் வித விதமான அர்த்தங்களை அந்த புத்தகம் இன்று வரை என்னுள் ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது.

இப்படி என் வாழ்வில் 5 வயதில் எனக்கு புத்தகங்களுடன் ஏற்பட்ட தொடர்பு சிறிது சிறிதாக அடைந்த பரிணாம வளர்ச்சி 40 வயதில் ஒரு நடு நிலையை எட்டி இருக்கிறது. பலவிதமான கால கட்டங்களில் புத்தகங்கள் எனக்கு ஒரு நல்ல நண்பனாக, வழிகாட்டியாக இருந்து இருக்கிறது. வாழ்க்கை இருட்டில் வெளிச்சத்தை காட்டி இருக்கிறது. நான் இவ்வளவு புத்தகங்கள் படித்திருக்கிறேன் என்பதை பறை சாற்றிக் கொள்வதற்காக இதை நான் எழுதவில்லை. என்னைப் போல் பல நண்பர்கள் இருக்கக் கூடும். அவர்களில் சில பேர் மேற்குறிப்பிட்ட சில புத்தகங்களை படித்தால் அவர்களிடையே நிச்சயம் ஒரு மாற்றம் ஏற்படும் என்பதை மட்டும் உறுதியாக என்னால் சொல்ல முடியும்.

சின்ன குழந்தையின் கைவிரல் தொடல் போல, காதலியின் கள்ளச் சிரிப்பு போல, ஆசிரியரின் கைப் பிரம்பு போல, தோழர்களின் தோள்களைப் போல, அம்மாவின் தாலாட்டைப் போல, தந்தையின் அறிவுரை போல, பெரியவர்களின் கம்பீரம் போல, மீசையின் ஆண்மை போல இன்னும் எத்தனை எத்தனை உணர்ச்சிகளை இந்த உள்ளம் இந்த புத்தகங்களின் மூலம் அனுபவித்திருக்கும். யோசித்துப் பாருஙகள். இந்த வரிகளின் ஆழ்ந்த அர்த்தங்கள் விளங்கும்.


நம்புபவர்கள் படிக்க ஆரம்பியுங்கள். நம்பாதவர்கள் இன்னும் சில காலம் காத்திருங்கள். A book has its own journey to make என்று ஒரு சொல் உண்டு. உங்களுக்கு தேவையான புத்தகங்கள் உங்களை நாடி வரும் காலம் வெகு தொலைவில் இல்லை. காத்திருங்கள், வந்து சேரும். படித்துப் பாருங்கள். உங்கள் முன்னேற்றத்தை உணர்வீர்கள்.

வாழ்த்துக்களுடன்

உங்கள் மதுசூதனன்.

3 comments:

chandar said...

Madhu my dear friend

Books are not only good friends, but various other functions/roles.
Some time ago, I had read somewhere "Some books are for reading. Some are for thinking. Some others have to be digested"

As far as the earlier fictional part is concerned, I found your range stops with reading. There are very good, great authors in Tamil, just because they had written in Tamil, had not become that famous. The immediate names which comes my mind include Puthumai pithan (the master story teller), T.Janakiraman(a master in novel writing, I read his Mogalmul, 800 pages in 2 days with hardly eating and sleeping inbetween), La.Sa.Ramamirtham (the intricacies by which he owes his story Wow!),Ku.Pa.Ra,;
Ka.Na.Subramaniam for his crtical articles ,Jayakanthan, Vannanilavan, Vannadasan, recently S.Ramakrishanan, Nanjil Nadan, Jayamohan .... the list is endless. Even in English Ayan Rand stands apart. Leave alone other French, German, Polish, Swedish, Russian authors. Malayalam and Kannada too have very good authors, some of the best are transalated in Tamil. Please find time to go through these treasures.
I feel bad in a way I know only two languages, each language equals to each individuals. If a person knows 3 languages, it is equal to 3 persons.
Keep reading to refresh the thoughts and to expand it.

Pretty Angel said...

A good book is a good friend forever, Let us read

Unknown said...

pls tell me eppadi aangila noval padikkum alavuku english arivu valarnthathu enaku aangila booka padikanunu aasaiya iruku but avalo arivu illa surukama kekuren eppadi aangila arivai valarthu
kolvathu