Monday, December 14, 2009

எத்தனை எத்தனை.

வந்த நோக்கம் என்னவென்று தெரியாமல் வாழும் மக்களுக்கு மத்தியில் எந்த நோக்கமும் இல்லாமல் உதவும் உள்ளங்கள் தான் எத்தனை எத்தனை.
செல்லும் பாதை அறியாமல் துவங்கும் பயணங்கள் தான் எத்தனை எத்தனை
அடைந்த பொருள் காக்கத் துடிக்கும் அடையா பொருள் அடையத் துடிக்கும் ஆசைகள் தான் எத்தனை எத்தனை
உடைந்த மனம் உணராமல் கடைசி வரை உடைக்கும் உளி எத்தனை எத்தனை
உள்ளுள்ள நிம்மதி உணராமல் வெளியில் அதை தேடும் மடைமை தான் எத்தனை எத்தனை
பெற்றுள்ள சொத்துக்களை பேணாமல் பெற்றதை தொலைக்கும் பேதமை தான் எத்தனை எத்தனை
இருக்கும் வரை உணராமல் போன பின் புலம்பல் தான் எத்தனை எத்தனை
புலம்பல் ஓய்ந்த பிறகும் உள்ளதை உணராமல் போனதை மறக்கா தன்மை தான் எத்தனை எத்தனை
பக்தி என்றால் கோவில் தான் என்றும் கோவிலில் மட்டும் தான் பக்தி என்னும் சுயநலம் தான் எத்தனை எத்தனை
இதை தருவேன் இதை தருவாய் என கடவுளிடம் பேசும் பேரம் தான் எத்தனை எத்தனை

தன் நாடு தன் மக்கள் என என்னாமல் தன் வீடு தன் மாக்கள் என எண்ணுவோர் தான்எத்தனை எத்தனை
அவர் பார்ப்பார் இவர் பார்ப்பார் என தான் பார்க்காமல் ஒதுங்கும் மக்கள் தான் எத்தனை எத்தனை
அவர் வேறு இவர் வேறு தான் வேறு என வேற்றுமை தான் எத்தனை எத்தனை
பெரியோர் சொல் பெரியோர்களுக்கும் மட்டுமே என்றென்னும் சிறுமனம் தான் எத்தனை எத்தனை
சிறியோர் அனைவரும் சிறார்களே என்றென்னும் சிறுமை தான் எத்தனை எத்தனை
சொத்துக்காகத் தான் உழைக்கிறேன் என சொந்தங்களை மறப்பவர் தான் எத்தனை எத்தனை
உழைப்பின் பலனை உணராமல் மடிபவர் தான் எத்தனை எத்தனை
மற்றோர் மகிழ்ச்சியில் மலர்ச்சியை உணர்பவர் தான் எத்தனை எத்தனை
அது எனது இது எனது இவை எனது என்போர் மத்தியில்
மரணம் கூட நமதில்லை நமது உடலுக்கு என்று உணர்போர் தான் எத்தனை எத்தனை
இத்தனை கேள்விகள் நமக்குள் இருக்கையில் விடைகளை வெளியுலகில் தேடுவோர் தான் எத்தனை எத்தனை.

No comments: